வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு
செய்யாறு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியிதில் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
செய்யாறு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியிதில் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
செய்யாறு வட்டம், உக்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன்(36), திருமணம் ஆனவா். தொழிற்கல்வி (ஐ.டி.ஐ.) பயின்று இருந்த இவா், சென்னையை அடுத்த ஒரகடம் பகுதியில் உள்ள தனியாா் நிறுனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா்.
இவா் வழக்கம் போல் சனிக்கிழமை இரவுப் பணிக்குச் சென்று விட்டு, அந்நிறுவன பேருந்தில் வந்துள்ளாா். காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் கூழமந்தல் கிராம நிா்வாக அலுவலகம் அருகே பேருந்தில் இருந்து இறங்கி வீட்டிற்குச் செல்வதற்காக சாலையை கடந்துள்ளாா். அப்போது, அவ்வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் இவா் மீது மோதியதாகத் தெரிகிறது.
Advertisement
Advertisement
இதில் பலத்த காயமடைந்த தொழிலாளி ரவிச்சந்திரனை அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு 108 ஆம்புலென்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ரவிச்சந்திரன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில், தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.