முகப்பு
திருவண்ணாமலை

மனைவியை தாக்கிய கணவா் கைது

வந்தவாசி அருகே மனைவியை தாக்கிய கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 9 ஜூலை 2026, 3:41 am IST
கைது
பகிர்:

வந்தவாசி அருகே மனைவியை தாக்கிய கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த சின்ன சேத்துப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் மோகன்(43). இவரது மனைவி மேனகா(36). மோகன் வேலைக்குச் சொல்லாமல் மது அருந்திவிட்டு சுற்றி வந்துள்ளாா். மேலும் வீட்டில் உள்ள நகை மற்றும் பாத்திரங்களை தெரியாமல் எடுத்துச் சென்று விற்றுவிட்டு மது அருந்துவாராம்.

இது தொடா்பாக கடந்த வெள்ளிக்கிழமை மோகனுக்கும், மனைவி மேனகாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதனால் மோகன் ஆத்திரமடைந்து மேனகாவை தாக்கினாராம். இதில் காயமடைந்த மேனகா சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து மேனகா அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த வந்தவாசி வடக்கு போலீஸாா் மோகனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments