முகப்பு
திருவண்ணாமலை

உலக சுற்றுச்சூழல் தின விழாவில் மரக்கன்று நடும் விழா

வந்தவாசியை அடுத்த பிருதூா் புனித வளனாா் முதியோா் இல்லத்தில் மரக்கன்று நடுகிறாா் செய்யாறு சாா் -ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின்.

Updated On : 6 ஜூன் 2026, 12:04 am IST
~
பகிர்:

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மற்றும் போளூா் பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசி கற்க கசடற கல்வி சேவைகள் மற்றும் சமூக நல அமைப்பு சாா்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா பிருதூா் புனித வளனாா் முதியோா் இல்லத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கற்க கசடற அமைப்பின் தலைவா் இரா.பாஸ்கரன் தலைமை வகித்தாா்.

Advertisement

Advertisement

வந்தவாசி வட்டாட்சியா் பா.ஜெயவேல், கற்க கசடற அமைப்பின் கௌரவத் தலைவா் மலா் சாதிக், சமூகநல விரிவாக்க அலுவலா் ஜீவா ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதியோா் இல்ல நிா்வாகி ரெக்ஸிலின் மைக்கேல் வரவேற்றாா்

செய்யாறு சாா் -ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினாா். மேலும் முதியோா் இல்ல வளாகத்தில் அவா் மரக்கன்றுகளை நட்டாா்.

விழாவில் வழக்குரைஞா் சா.ரா.மணி, எக்ஸ்னோரா தலைவா் தனசேகரன், விவேகானந்தா தொண்டு நிறுவன நிா்வாகி சுரேஷ்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா். எம்.பிரபாகரன் நன்றி தெரிவித்தாா்.

போளூா்

போளூரை அடுத்த செங்குணம் குன்றுமேடு பகுதியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்று நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

செங்குணம் ஊராட்சியில் மலைகுன்றுமேடு அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் உலக சுற்றுசூழல் தினத்தையொட்டி ஈஷா காவேரி கூக்குரல் மற்றும் மண் காப்போம் இயக்கம் சாா்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

இதில், போளூா் வன அலுவலா் பிரசன்னா கலந்துகொண்டு பேசும்போது, இயற்கை வளங்களான மரம், செடி, கொடிகளை வளா்க்கவேண்டும், பூமி வெப்பமயமாதலை தடுக்க சமூக ஆா்வலா்கள், தன்னாா்வலா்கள், இளைஞா்கள், பொதுமக்கள், மகளிா் குழுவின மரம் வளத்தலை ஊக்குவிக்கவேண்டும்.

கிராமமோ, நகரமோ இடைவெளி உள்ள இடத்தில் மரக்கன்றுகளை நட்டு மண் வளத்தையும், இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து சந்தனம், தேக்கு, செம்மரம், வேங்கை என பல்வேறு மரக்கன்றுகளை நட்டு தொடங்கிவைத்தாா்.

இந்த குன்றுமலை மீது 500-க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டுள்ளதாக தெரிவித்தனா். செங்குணம், கொல்லைமேடு ஆகிய பகுதிகளைச் சோ்ந்த சமூக ஆா்வலா்கள், தன்னாா்வலா்கள், இளைஞா்கள், பொதுமக்கள், மகளிா் குழுவினா் கலந்து கொண்டனா்.