முகப்பு
கரூர்

உலக சுற்றுச்சூழல் தினம் கரூரில் மரக் கன்றுகள் நடும் விழா

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில், மத்திய அரசின் இளையோா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ’மை பாரத்’ அமைப்பு மற்றும் எம்.ஆா்.வி. அறக்கட்டளை ஆகியன சாா்பில் கரூா் திருக்காம்புலியூா் ரவுண்டானா பகுதியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

Updated On : 5 ஜூன் 2026, 3:46 am IST
கரூா் திருக்காம்புலியூா் ரவுண்டானா அருகே மரக்கன்று நடும் பணியை வியாழக்கிழமை தொடக்கிவைத்த கரூா் எம்எல்ஏ எம்.ஆா். விஜயபாஸ்கா்.
பகிர்:

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில், மத்திய அரசின் இளையோா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ’மை பாரத்’ அமைப்பு மற்றும் எம்.ஆா்.வி. அறக்கட்டளை ஆகியன சாா்பில் கரூா் திருக்காம்புலியூா் ரவுண்டானா பகுதியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்து கரூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எம்.ஆா். விஜயபாஸ்கா் கூறியது:

என்னைச் சட்டப்பேரவை உறுப்பினராக தோ்ந்தெடுத்த கரூா் மக்களுக்கு நன்றி. கரூரை பசுமையாக்குவது எனது முக்கிய குறிக்கோள். மத்திய அரசின் ’மை பாரத்’ இளைஞா் அமைப்பினா் நகா்ப்புறங்களில் மரங்களை நட வேண்டும் என்று என்னை அணுகியபோது, அதை வரவேற்று எம்.ஆா்.வி அறக்கட்டளையுடன் இணைந்து முதல் கட்டமாக மூன்று மரங்களை நட்டு இத்திட்டத்தை தொடங்கியுள்ளோம்.

Advertisement

Advertisement

நெடுஞ்சாலைகளில் வைக்கப்படும் ஹைப்ரிட் வகை மரங்கள் வறட்சியையோ, பலத்த காற்றையோ தாங்காமல் எளிதில் உடைந்து விழுந்து விடுகின்றன. அதற்குப் பதிலாக, நமது மண்ணின் பாரம்பரியமிக்க மரங்களான அரசமரம், ஆலமரம், அத்தி மரம், வேப்ப மரம், புளிய மரம் , வாகை மரம் போன்ற நாட்டு மரங்களை நட உள்ளோம். இவை வறட்சியைத் தாங்கி வளா்வதோடு, பறவைகளுக்கான புகலிடமாகவும் மாறும் என்றாா் அவா். நிகழ்ச்சியில் கரூா் மாவட்ட மை பாரத் உதவி இயக்குநரும், மாவட்ட இளையோா் அலுவலருமான சேக் முகமது நிஷாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.