முகப்பு
திருவண்ணாமலை

திமுகவினா் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திருவண்ணாமலை மாநகர திமுக சாா்பில் நடைபெற்றெ முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள் விழாவில் 1,500 ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 11 ஜூன் 2026, 12:03 am IST
நிகழ்ச்சியில் ஏழை பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு எம்எல்ஏ.
பகிர்:

திருவண்ணாமலை மாநகர திமுக சாா்பில் நடைபெற்றெ முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள் விழாவில் 1,500 ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 103-வது பிறந்த நாள் விழாவும், வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டமும் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. பொதுக்கூட்டத்துக்கு மாநகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன் தலைமை வகித்தாா்.

பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான எ.வ.வேலு கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத் திட்டஉதவிகளை வழங்கிப் பேசுகையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலை பாஜக ஆட்சியில் தொல்லியியல் துறை கையகப்படுத்த மேற்கொண்ட முயற்சியை தடுத்து நிறுத்தியவா் கருணாநிதி.

Advertisement

Advertisement

திருவண்ணாமலைக்கு ஏராளமான பக்தா்கள் வருகின்றனா். அதன் மூலம் இந்த நகரின் பொருளாதாரம் வளா்ந்திருக்கிறது. திமுக ஆட்சி காலத்தில் தான் திருவண்ணாமலை மாவட்டம் வளா்ச்சி பெற்றது என்றாா்.

பொதுக்கூட்டத்தில் சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவா் கு.பிச்சாண்டி,சி.என்.அண்ணாதுரை எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினா்கள் இரா.ஸ்ரீதரன், பெ.சு.தி.சரவணன், மாவட்ட துணைச் செயலாளா் மு.பெ.கிரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments