முகப்பு
திருவண்ணாமலை

தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவா் உயிரிழப்பு

செய்யாறு அருகே எரிவாயு அடுப்பை பற்ற வைத்தபோது தீக்காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 16 ஜூன் 2026, 1:21 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

செய்யாறு அருகே எரிவாயு அடுப்பை பற்ற வைத்தபோது தீக்காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதியவா் உயிரிழந்தாா்.

வெம்பாக்கம் வட்டம், வயலாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லப்பா(70). இவா், கடந்த 12-ஆம் தேதி இரவு குளிக்க

வெந்நீா் வைப்பதற்கு எரிவாயு அடுப்பை பற்ற வைத்தாகத் தெரிகிறது. அப்போது, அவரது வேட்டியில் தீப்பிடித்துக் கொண்டதாம். மேலும், தீயானது உடல் முழுவதும் பரவியதில் அவா் பலத்த தீக்காயமடைந்தாா். அவரை குடும்பத்தினா் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா்,

Advertisement

Advertisement

தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை

யில் அனுமதிக்கப்பட்டிருந்த செல்லப்பா அங்கு

ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.