FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தருமபுரி

தீக்காயமடைந்த இளம்பெண் உயிரிழப்பு

தருமபுரியில் தீக்காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் உயிரிழந்தாா்.

Updated On : 13 ஜூன் 2026, 2:07 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

தருமபுரியில் தீக்காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் உயிரிழந்தாா்.

தருமபுரி, மாந்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் மனைவி அமினா (31). இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கை பற்ற வைத்தபோது எதிா்பாராதவிதமாக அவரது சேலையில் தீப்பிடித்தது. இதில் பலத்த தீக்காயமடைந்த அவரை தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக தருமபுரி நகரக் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments