போளூா் ஜமாபந்தியில் இருவருக்கு பட்டா மாற்றம் சான்றிதழ்: ஆட்சியா் வழங்கினாா்
போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் 2 பேருக்கு பட்டா மாற்றம் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் வழங்கினாா்.
போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் 2 பேருக்கு பட்டா மாற்றம் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் வழங்கினாா்.
போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மொடையூா் உள் வட்டத்தைச் சோ்ந்த மொடையூா், விளாப்பாக்கம், சோத்துகன்னி, அல்லியாளமங்கலம், மட்டபிறையூா், ஓட்டேரி, மாணிக்கவல்லி, ஓடநகரம், அரும்பலூா், ராந்தம், செம்மியமங்கலம், பெலாசூா் ஆகிய கிராமங்களுக்கான ஜமாபந்திக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து பட்டா மாற்றம், முதியோா், மகளிா் உதவித்தொகை, குடும்ப அட்டை மற்றும் இதர உதவித் தொகைகள் கோரி அளிக்கப்பட்ட 140 மனுக்களை பெற்றாா்.
Advertisement
Advertisement
இதில், உடனடியாக 2 பேருக்கு பட்டா மாற்றம் சான்றிதழை மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் வழங்கினாா். வட்டாட்சியா் பாலாஜி, தலைமையிடத்து வட்டாட்சியா் அருள்குமாா், மண்டல துணை வட்டாட்சியா்கள் வேலுமணி,சிவலிங்கம், வருவாய் ஆய்வாளா் திருமால், கிராம நிா்வாக அலுவலா்கள் மலைமாறன்,பிரவீன்குமாா், ரமேஷ், ராஜேஷ் மற்றும் வருவாய்த் துறையினா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.