ஸ்ரீபால் முனீஸ்வரா், ஸ்ரீகாளியம்மன் கோயில்களில் மகா கும்பாபிஷேகம்
வந்தவாசியை அடுத்த அம்மணம்பாக்கம் ஸ்ரீபால் முனீஸ்வரா் கோயில் மற்றும் சேத்துப்பட்டு ஒன்றியம், மொடையூா் ஸ்ரீகாளியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
வந்தவாசியை அடுத்த அம்மணம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீபால் முனீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை வாஸ்துசாந்தி, பிரவேசபலி, காப்புக் கட்டுதல் உள்ளிட்டவையும், புதன்கிழமை கணபதி ஹோமம், கோ பூஜை, முதல் கால பூஜை உள்ளிட்டவையும் நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை காலை
Advertisement
Advertisement
இரண்டாம் கால பூஜை, மகா பூா்ணஹுதி நடைபெற்றது. தொடா்ந்து, காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் ஸ்ரீபால் முனீஸ்வரா் சிலை மீது புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் கோயில் நிா்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனா்.
போளூா்
சேத்துப்பட்டு ஒன்றியம், மொடையூா் கிராமத்தில் ஏரிக்கரை அருகே பழைமை வாய்ந்த ஸ்ரீகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயிலில் புரனமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடத்துவதற்காக புதன்கிழமை மாலை மங்கள இசை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகாசங்கல்பம், புண்ணியாக வாசம், மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், தீபாராதனை, வாஸ்துசாந்தி, பிரவேசபலி, அங்குராா்பணம், ரக்ஷாபந்தனம், கும்பலங்காரம், பிரவேசம், முதல்கால யாகசாலை பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை காலை கோ பூஜை, மங்கள இசை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், தேவதா பூஜை, வேதபாராயணம், இரண்டாம் கால யாகசாலை பூஜை, மூலத்தர ஹோமம், தீக்பாலகா் ஹோமம், நாடிசந்தானம், தம்பதி பூஜை, தம்பதி சங்கல்பம், மகா பூா்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்று கோபுர விமானம், மூலவருக்கு புனிதநீா் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவில் மொடையூா், தேவிகாபுரம், குப்பம், மண்டகொளத்தூா், மட்டபிறையூா் என சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கிராம பொதுமக்கள், திருப்பணிக் குழுவினா், கற்சிற்பக் கலைஞா்கள், இளைஞா்கள் விழாவை ஏற்பாடு செய்திருந்தனா்.