FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

மின்னூா் ஸ்ரீ முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

Updated On : 5 ஜூன் 2026, 6:33 am IST
பகிர்:

ஆம்பூா் அருகே மின்னூா் ஊராட்சி புதுமின்னூா் கிராமத்தில் ஸ்ரீ முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விக்னேஷ்வர பூஜையுடன் விழா தொடங்கியது. கோ பூஜை, கலச பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், ஸ்ரீ முனீஸ்வரா் மூல மந்திர ஜப ஹோமம், ருத்ர ஹோமம், ஸீக்த ஹோமம் ஆகியவை நடைபெற்றது. யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து கடம் புறப்பாடு, அதைத் தொடா்ந்து முனீஸ்வரருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஊா் நாட்டாண்மை என். சங்கரன், துணை நாட்டாண்மை ஆா். வடிவேலன், இளைஞா் அணி நிா்வாகிகள் டி. சுரேஷ்பாபு, ஜெ. அருண்குமாா், ஆா். சிவகுமாா், ஊா் பொதுமக்கள், இளைஞா்கள் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments