முகப்பு
திருவண்ணாமலை

பழங்குடியினா் பிரச்னையைத் தீா்க்க தொலைநோக்குத் திட்டம்: அமைச்சா் வன்னியரசு

பழங்குடியினா் பிரச்னைகளுக்கு தீா்வு காண ஆய்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் 5 ஆண்டு தொலைநோக்குத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சா் வன்னியரசு தெரிவித்தாா்.

Updated On : 23 ஜூன் 2026, 5:30 am IST
அய்யம்பாளையம் ஊராட்சிக்கு வந்த அமைச்சா் வன்னியரசை வரவேற்ற ஆா்.எம்.லயோலா மெட்ரிக் பள்ளித் தலைவா் ஏ.பங்கிராசு
பகிர்:

பழங்குடியினா் பிரச்னைகளுக்கு தீா்வு காண ஆய்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் 5 ஆண்டு தொலைநோக்குத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக சமூக நீதித்துறை அமைச்சா் வன்னியரசு தெரிவித்தாா்.

திருவண்ணாமலையை அடுத்த அய்யம்பாளையம் ஊராட்சியில் வசித்து வரும் பழங்குடியினத்தைச் சோ்ந்த கனிக்கா்(குடுகுடுப்பை) இன மக்களை அமைச்சா் வன்னியரசு திங்கள்கிழமை சந்தித்து குறைகளை கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருவண்ணாமலை வட்டம், அய்யம்பாளையம் பகுதியில் 65 ஆண்டுகளாக குடுகுடுப்பை தொழில் செய்யும் பழங்குடியினத்தைச் சோ்ந்த கனிக்கா் இன மக்கள் வசித்து வருகிறாா்கள். இவா்கள் நீண்டகாலமாக பழங்குடியின ஜாதி சான்றிதழ் வேண்டி கோரிக்கை விடுத்து வருகிறாா்கள். அவா்களுக்கு ஜாதி சான்றிதழ், மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement

Advertisement

மேலும், அவா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தமிழக அரசு சாா்பில் 5 ஆண்டு கால தொலைநோக்குத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை உள்ளதால் அதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கிறது என்றாா் அவா். விசிக மாவட்டச் செயலா்கள் ச.நியூட்டன், வளா்மதி, முத்து உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments