வக்ஃப் வாரிய சொத்துக்கள் கணக்கெடுத்து சீரமைக்கப்படும்: அமைச்சா் அ.மு.ஷாஜகான்
தமிழகத்தில் உள்ள வக்ஃப் வாரிய சொத்துக்கள் கணக்கெடுக்கப்பட்டு சீரமைக்கப்படும் என்றாா் சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் அ.மு.ஷாஜகான்.
தமிழகத்தில் உள்ள வக்ஃப் வாரிய சொத்துக்கள் கணக்கெடுக்கப்பட்டு சீரமைக்கப்படும் என்றாா் சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் அ.மு.ஷாஜகான்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் சட்டப்பேரவை உறுப்பினரும், சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சருமான அ.மு.ஷாஜகான் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக கும்பகோணத்துக்கு சனிக்கிழமை வந்தாா். அவரை மாவட்ட ஆட்சியா் பா.பிரியங்கா பங்கஜம், மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வக்ஃப் வாரியத்தின் சொத்துக்கள் கணக்கெடுக்கப்பட்டு, அளவீடு செய்து சீரமைக்கப்படும். இதற்கு முன்பு இருந்த அரசுகளால் பல்வேறு குறிப்புகள் தரப்பட்டுள்ளன. அந்த குறிப்புகளை பின்பற்றி முதல்வருடன் ஆலோசித்து, புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும்.
Advertisement
Advertisement
தஞ்சாவூா் மாவட்டம், குடிகாடு, அரியலூா் மாவட்டம் ராமநல்லூா் பகுதியை இணைக்கக் கூடிய உயா்மட்ட பாலம் அமைக்கப்படும். கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அமைக்க ஏற்பாடு செய்யப்படும். மேலும், திருஆரூரான் சா்க்கரை ஆலை விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீா்வு காணப்படும் என்றாா் அவா்.