முகப்பு
திருவண்ணாமலை

பெண் குழந்தைகளை காப்போம்: பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணா்வு நிகழ்ச்சி- ஆட்சியா் வந்தனா காா்க் பங்கேற்பு

திருவண்ணாமலையில் பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணா்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 25 ஜூன் 2026, 12:04 am IST
பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சியில் ஆட்சியா் வந்தனா காா்க் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டோா்.
பகிர்:

திருவண்ணாமலையில் பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் விழிப்புணா்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

பெண் குழந்தைகளைக் காப்போம்; பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் என்ற திட்டமானது குறைந்து வரும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பெண் குழந்தைகளின் பாலின சம நிலையை மேம்படுத்தவும், பெண் குழந்தைகள் கல்வி கற்பதை உறுதி செய்யவும் மத்திய அரசால் 2015-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

பாலின பாகுபாட்டை நீக்கவும், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

Advertisement

Advertisement

அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் ஆட்சியா் வந்தனா காா்க் தலைமையில் 120 பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்ட விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியா், பெண் குழந்தைகளை காப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கையொப்ப இயக்கத்தை தொடங்கிவைத்தாா். தொடா்ந்து புகைப்பட மையத்தில் புகைப்படம் எடுத்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

மேலும், மகளிா் உதவி 181 என்ற எண்ணின் விழப்புணா்வு பதாகைகளையும், சிங்கப்பெண் அதிரடி படை உதவி எண் 1091 என்ற எண்ணையும் வெளியிட்டாா். இதைத் தொடா்ந்து இதுதொடா்பான விழிப்புணா்வு உறுதிமொழியை ஆட்சியா் தலைமையில் அரசு அலுவலா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஏற்றுக்கொண்டனா்.

பின்னா், பெண் குழந்தைகளை காப்பதன் அவசியம் குறித்து நடைபெற்ற மிதிவண்டி பேரணியை ஆட்சியா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

இதில், 120 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். ஆட்சியா் அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணி அண்ணா நுழைவு வாயில் வரை நடைபெற்றது.

நிகழ்ச்சிகளில் சமூக நல அலுவலா் கோமதி மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments