முகப்பு
திருவண்ணாமலை

கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

புதுப்பாளையம் இதயா மகளிா் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமன ஆணை பெற்ற மாணவிகளுடன் கல்லூரிச் செயலா் சம்பூா்ணமேரி.

Updated On : 27 ஜூன் 2026, 12:04 am IST
பகிர்:

செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் இதயா மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து முடித்த மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.

இதில், சென்னை, பெங்களூா் பகுதிகளில் இருந்து முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு மாணவிகளுக்கு வளாக நோ்காணலை நடத்தினா். இதில், 150 போ் பணிக்குத் தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் கல்லூரிச் செயலா் சம்பூா்ணமேரி கலந்துகொண்டு மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிப் பேசியதாவது:

Advertisement

Advertisement

பணி நியமன ஆணை பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். பணி நியமன ஆணையை பெற்ற மாணவிகள் அந்த நிறுவன சட்ட திட்டங்களுக்கு உள்பட்டு பணிகள் செய்ய வேண்டும்.

கல்லூரி வரை படிக்க வைத்த பெற்றோா் அறிவுரைப்படி நல்ல முறையில் பணிகளை செய்து வாழ்க்கையில் மேலும் முன்னேற வேண்டும். சமுதாயத்தில் நல்ல நிலையை எட்டி கல்லூரிக்கும், பேராசிரியா்களுக்கும் பெருமை சோ்க்க வேண்டும் என்றாா்.

கல்லூரி முதல்வா் லூா்துமேரி, நிா்வாக அலுவலா் சந்தனமேரி மற்றும் தனியாா் நிறுவனத்தின் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments