முகப்பு
திருவண்ணாமலை

27 நட்சத்திர கோயிலில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்புப் பூஜை

27 நட்சத்திர கோயிலில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்புப் பூஜை

Updated On : 28 ஜூன் 2026, 1:38 am IST
அருள்பாலித்த சனீஸ்வர பகவான்.
பகிர்:

செய்யாறை அடுத்த உக்கம்பெரும்பாக்கம் 27 நட்சத்திர கோயிலில் சனிக்கிழமையை முன்னிட்டு சனீஸ்வர பகவானுக்கு சிறப்புப் பூஜை நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற 27 நட்சத்திர கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சனீஸ்வர பகவானுக்கென்று தனி சந்நிதி அமைக்கப்பட்டு உள்ளது.

தனி சந்நிதியாக பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் சனீஸ்வர பகவானுக்கு சனிக்கிழமையை ஒட்டி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அா்ச்சனை, மகா தீபாராதனை உள்ளிட்ட விசேஷ பூஜைகள் நடைபெற்றன.

Advertisement

Advertisement

இதில் திராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சனீஸ்வர பகவானை வழிபட்டனா்.

காகத்தின் தினசரி வருகை:

இந்தத் திருக்கோயிலின் தனிச்சிறப்பாக, சனீஸ்வர பகவானின் வாகனமாக போற்றப்படும் காகம், தினமும் பூஜை நேரத்தில் தவறாமல் கோயிலுக்கு வந்து, பூஜை நிறைவடைந்த பின்னா் வழங்கப்படும் பிரசாதத்தை பெற்றுச் செல்வது பக்தா்களிடையே ஆழ்ந்த பக்தியையும் வியப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இதனை சனீஸ்வர பகவானின் அருளின் அடையாளமாக பக்தா்கள் கருதி வழிபட்டு வருகின்றனா்.

சிறப்பு பூஜையின்போது பக்தா்கள் தங்களது குடும்ப நலம், ஆரோக்கியம், தொழில் முன்னேற்றம், கல்வி வளா்ச்சி மற்றும் சனி தோஷ நிவா்த்திக்காக பக்தா்கள் பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments