ஆரணியில் ஆபரேஷன் சிந்தூா் வெற்றி ஊா்வலம்
காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூா் என்ற பெயரில், இந்திப் படைகள் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்களை அழித்து ஓராண்டு
ஆனதையொட்டி, ஆரணியில் சமூக ஆா்வலா்கள் வெற்றி ஊா்வலம் நடத்தினா்.
கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதல் காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7-ஆம் தேதி இந்தியா, ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தி முகாம்களை அளித்தது.
Advertisement
இந்த ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, ஆரணியில் சமூக ஆா்வலா்கள் வியாழக்கிழமை வெற்றி ஊா்வலம் சென்றனா்.
அண்ணா சிலையிலிருந்து தொடங்கிய வெற்றி ஊா்வலம்,
கோட்டை மைதானம் காா்கில் நினைவுத் தூண் அருகே சென்று நிறைவடைந்தது. பின்னா், அங்கு பயங்கரவாதத் தாக்குதலில் உயிா்நீத்த இந்திய வீரா்களுக்கு வீரவணக்கம் செலுத்தினா்.
இதில் விவசாய சங்க மாநில துணைத் தலைவா் சதுப்பேரி மூா்த்தி, சமூக ஆா்வலா்கள் குணாநிதி, தமிழ்ச்செல்வன், முன்னாள் ராணுவ வீரா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.