ஓய்வு தேவை! சமூக வலைதளங்களிலிருந்து விலகிய கயாடு லோஹர்!
சமூக வலைதளங்களிலிருந்து தற்காலிகமாக விலகிய கயாடு லோஹர்...
நடிகை கயாடு லோஹர் சமூக வலைதளங்களிலிருந்து கொஞ்ச காலம் விலகுவதாக அறிவித்துள்ளார்.
'முகில்பேட்ட' என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கயாடு லோஹர். 2021 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்குப் பிறகு 'பத்தோன்பதாம் நூற்றாண்டு' என்ற மலையாளப் படத்திலும், 'அல்லூரி' என்ற தெலுங்குப் படத்திலும், 'ஐ பிரேம் யு' என்ற மராத்தி படத்திலும் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான 'டிராகன்' படத்தில் பல்லவி கதாபாத்திரத்தில் நடித்து, தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
அந்தச் சமயத்தில் கயாடு லோஹர் சமூக வலைதளங்களில் சென்சேஷன் ஆகியிருந்தார். அவரது ரீல்ஸ்களும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருந்தன. மறுபுறம் தனக்குத் தானே மீம்ஸ் போட்டுக்கொண்டு தன்னை புரமோட் செய்து கொள்கிறார் கயாடு லோஹர் என்ற விமர்சனமும் எழுந்தது.
Advertisement
Advertisement
இறுதியாக, கயாடு நடிப்பில் வெளியான மலையாளப் படமான பள்ளிச்சட்டம்பி எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் தோல்விப்படமானது. அடுத்ததாக, இதயம் முரளி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், சமூக வலைதளங்களிலிருந்து கொஞ்சம் ஓய்வு தேவைப்படுவதாகக் கூறி அதிலிருந்து விலகுவதையும் அறிவித்துள்ளார்.
Actress Kayadu Lohar has announced that she is taking a break from social media for a while.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.