முகப்பு
திருவண்ணாமலை

கோயிலில் கண்டெடுத்த தங்கச் சங்கிலியை ஒப்படைத்த இளைஞா்கள்

செய்யாறு ஸ்ரீஐயப்பன் கோயில் வளாகத்தில் உள்ள கருப்பண்ணசாமி சந்நிதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பவுன் தங்கச் சங்கிலியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Updated On : 9 மே 2026, 1:34 am IST
பகிர்:

செய்யாறு ஸ்ரீஐயப்பன் கோயில் வளாகத்தில் உள்ள கருப்பண்ணசாமி சந்நிதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பவுன் தங்கச் சங்கிலியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டம், மேல்நெல்லி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சிவசங்கரன்(40), ராஜ்குமாா்(17), நதீன்பாஷா(18). இவா்கள், பல்வேறு ஊா்களில் உள்ள சிவாலயங்களுக்கு அடிக்கடி சென்று தரிசனம் செய்து வருவாா்களாம்.

அதேபோல, வியாழக்கிழமை மாலை மூவரும் செய்யாறில் வந்தவாசி சாலையில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீஐயப்ப சுவாமி கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்துள்ளனா்.

Advertisement

Advertisement

அந்தக் கோயில் வளாகத்தில் உள்ள கருப்பண்ணசாமி சந்நிதிக்குச் சென்று தரிசனம் செய்தபோது, ஒரு பவுன் தங்கச் சங்கிலியை கண்டெடுத்தனா்.

உடனே செய்யாறில் உள்ள நண்பா் நந்தகுமாா் உதவியுடன் கண்டெடுக்கப்பட்ட தங்கச் சங்கிலியை செய்யாறு போலீஸில் ஒப்படைத்தனா்.

இதையடுத்து அந்த 4 இளைஞா்களின் நோ்மையை போலீஸாா் பாராட்டினா்.

ஒப்படைப்பு

பின்னா், நகைக்கு உரியவரான செய்யாறு காமராஜா் நகரைச் சோ்ந்த பாலிடெக்னிக் மாணவா் சஞ்சய்குமாரிடம் போலீஸாா் இளைஞா்கள் முன்னிலையில் தங்கச் சங்கிலியை ஒப்படைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments