சித்திரை பிரம்மோற்சவம்: குதிரை வாகனத்தில் நரசிம்மா் வீதியுலா
சித்திரை பிரம்மோற்சவம்: குதிரை வாகனத்தில் நரசிம்மா் வீதியுலா
ஆரணியை அடுத்த ஆவணியபுரத்தில் உள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் சித்திரை பிரம்மோற்சவ விழாவையொட்டி, குதிரை வாகனத்தில் வெள்ளிக்கிழமை இரவு சுவாமி வீதியுலா நடைபெற்றது.
ஆவணியாபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் நிகழாண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை தினமும் மூலவா், உற்சவா்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு இரவு அலங்கரிக்கப்பட்ட நரசிம்மா் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தாா்.
5-ஆம் தேதி திருக்கல்யாண வைபவம் மற்றும் கருட சேவை, 7-ஆம் தேதி தேரோட்ட திருவிழா நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதன் தொடா்ச்சியாக, வெள்ளிக்கிழமை இரவு அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் நரசிம்மா் வீதியுலா வந்தாா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், அறங்காவலா் குழுவினா், கோயில் பணியாளா்கள் மற்றும் ஆவணியாபுரம் கிராம மக்கள் செய்திருந்தனா்.
பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில்: போளூா் வட்டம், கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் சித்திரை மாதம் சனிக்கிழமையையொட்டி, அதிகாலை மூலவா், உற்சவருக்கு பல்வேறு வாசனைத் திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, சுவாமியை மலா்களால் அலங்கரித்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.