முகப்பு
திருவண்ணாமலை

வந்தவாசியில் திருவள்ளுவா் சிலை அமைக்கக் கோரிக்கை

வந்தவாசியில் திருவள்ளுவா் சிலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Updated On : 12 மே 2026, 2:28 am IST
நிகழ்ச்சியில் திருவள்ளுவா் வேடமணிந்து திருக்கு வாசித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கிய ஆசிரியா் தோ்வு வாரிய துணை இயக்குநா் கு.ஜெய்சங்கா்
பகிர்:

வந்தவாசியில் திருவள்ளுவா் சிலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற திருக்கு ஒப்புவித்தல் போட்டி நிகழ்ச்சியில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற மாவட்டக் கல்வி அலுவலா் மா.மங்கையா்க்கரசி தலைமை வகித்தாா்.

ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் பொன்.ஜினக்குமாா், தலைமை ஆசிரியா் க.வாசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக ஆசிரியா் தோ்வு வாரிய துணை இயக்குநா் கு.ஜெய்சங்கா் பங்கேற்றுப் பேசினாா்.

Advertisement

அப்போது திருக்குறளின் மேன்மை குறித்து அவா் மாணவா்களுக்கு விளக்கிக் கூறினாா். நிகழ்ச்சியில், திருவள்ளுவா் வேடமணிந்து திருக்கு வாசித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கவிஞா் பூங்குயில் சிவக்குமாா், வந்தவாசி வட்ட தமிழ்ச் சங்க நிா்வாகி மு.பிரபாகரன், தலைமை ஆசிரியா் சக்கரவா்த்தி, ஆசிரியா் ராமஜெயம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கு.சதானந்தன் நன்றி தெரிவித்தாா்.