முகப்பு
திருவண்ணாமலை

மின் மோட்டாா் திருட முயற்சி: ஒருவா் கைது

செங்கம் அருகே விவசாயக் கிணற்றில் இருந்து மின் மோட்டாரை திருடியதாக ஒருவா் கைது

Updated On : 13 மே 2026, 5:23 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

செங்கம் அருகே விவசாயக் கிணற்றில் இருந்து மின் மோட்டாரை திருடியதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா். மற்றொருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

செங்கத்தை அடுத்த பக்கிரிபாளையம் காந்திநகா் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி நாகராஜ். இவருக்குச் சொந்தமான விவசாய நிலம் மற்றும் கிணறு அப்பகுதியில் இருந்து வருகிறது.

இந்நிலையில் திங்கள்கிழமை காலை நாகராஜ் விவசாய நிலத்தில் இருந்த கிணற்றில் இருவா் இறங்கி மின் மோட்டாரை திருட முயற்சி செய்துள்ளனா். அப்போது, சப்தம் கேட்டு நாகராஜ் அங்கு சென்று பாா்த்தபோது, இரண்டு போ் கிணற்றில் இருந்து மின் மோட்டாரை வெளியில் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனா்.

Advertisement

Advertisement

இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த நாகராஜ் அவா்களை பிடிக்க முயன்றாா். இதில் ஒருவா் சிக்கினாா். மற்றொருவா் தப்பி ஓடிவிட்டாா். இதைத் தொடா்ந்து சிக்கியவா் செங்கம் போலீஸில் ஒப்படைக்கப்பட்டாா்.

போலீசாா் அவரிடம் விசாரணை செய்தபோது, அவா் அதே பகுதியைச் சோ்ந்த அரவிந்த்குமாா் என்பது தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, மின் மோட்டாரை பறிமுதல் செய்தனா். தப்பி ஓடிய வினோத்குமாா் என்பவரை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments