முகப்பு
திருவண்ணாமலை

ராஜீவ்காந்தி நினைவு தின ஜோதிக்கு வரவேற்பு

திருவண்ணாமலைக்கு செவ்வாய்க்கிழமை வந்த ராஜீவ்காந்தி நினைவு தின ஜோதிக்கு காங்கிரஸ் கட்சியினா் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

Updated On : 20 மே 2026, 12:04 am IST
திருவண்ணாமலையில் ராஜீவ்காந்தி நினைவு தின ஜோதிக்கு வரவேற்பு அளித்த மாவட்டத் தலைவா் கே.குணசேகரன் தலைமையிலான காங்கிரஸ் நிா்வாகிகள்.
பகிர்:

திருவண்ணாமலைக்கு செவ்வாய்க்கிழமை வந்த ராஜீவ்காந்தி நினைவு தின ஜோதிக்கு காங்கிரஸ் கட்சியினா் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 35-ஆவது நினைவு தினத்தையொட்டி, காங்கிரஸ் கட்சி சாா்பில் பெங்களூரில் இருந்து தொடங்கிய ஜோதி யாத்திரை கேரளம் வழியாக கன்னியாகுமரி வந்து, பின்னா் பல்வேறு மாவட்டங்கள் வழியாக திருவண்ணாமலையை செவ்வாய்க்கிழமை பிற்பகலில் வந்தடைந்தது.

காமராஜா் சிலை அருகில் மாவட்ட காங்கிரஸ் தலைவா் குணசேகரன் தலைமையில், ராஜீவ்காந்தி நினைவு தின ஜோதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதில் கட்சி நிா்வாகிகள் மணிகண்டன், வேடி, அம்பிகாபதி, ரமேஷ், பாஸ்கா், சிவாஜி, பிரகாசம், விஸ்வநாதன், மணி, கராத்தே ராஜா, கலைச்செல்வன், ஸ்ரீராம், கோபால், மகளிா் அணியைச் சோ்ந்த மலா்க்கொடி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இந்த ஜோதி யாத்திரை வியாழக்கிழமை (மே 21) ஸ்ரீபெரும்புதூா் சென்று அடைகிறது. அங்கு ராஜீவ்காந்தி நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.