முகப்பு
வேலூர்

புலவர் பதுமனாருக்கு தமிழ்ச் செம்மல் விருது

குடியாத்தம் புலவர் வே. பதுமனாருக்கு தமிழக அரசு சார்பில் தமிழ்ச் செம்மல் விருது செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 27 ஏப்ரல் 2017, 1:07 am IST
பகிர்:

குடியாத்தம் புலவர் வே. பதுமனாருக்கு தமிழக அரசு சார்பில் தமிழ்ச் செம்மல் விருது செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற விழாவில் இவரது 35 ஆண்டு கால தமிழ்ச் சேவையைப் பாராட்டி, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இவருக்கு தமிழ்ச் செம்மல் விருது, நற்சான்றிதழ், ரூ. 25 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார்.
பதுமனார் வள்ளலார் தெய்வீக நிலையம் என்ற அமைப்பைத் தொடங்கி 45 ஆண்டுகளாகவும், குடியாத்தம் முத்தமிழ்ச் சுவைச் சுற்றம் என்ற அமைப்பை நிறுவி 20 ஆண்டுகளாகவும், தெளிதமிழ் ஆர்வலர் அமைப்பு என்ற அமைப்பை நிறுவி 5 ஆண்டுகளாகவும் தமிழ்ச் சேவையாற்றி வருகிறார். இவர், இதுவரை 26 நூல்களை எழுதியுள்ளார். 5 ஆண்டுகளாக விஐடி பல்கலைக்கழகத்தின் அனைவருக்கும் உயர்கல்வித் திட்ட அறக்கட்டளை உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.