ஆம்பூர் அருகே பிடிபட்ட 8 அடி நீள மலைப்பாம்பு
ஆம்பூர் அருகே கிராமத்தில் 8 அடி நீள மலைப்பாம்பு திங்கள்கிழமை பிடிபட்டது.
ஆம்பூர் அருகே கிராமத்தில் 8 அடி நீள மலைப்பாம்பு திங்கள்கிழமை பிடிபட்டது.
மிட்டாளம் ஊராட்சி மேல்கூர்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த காளிதாஸின் நிலத்தில் சுமார் 8 அடி நீள மலைப்பாம்பு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஆம்பூர் வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், வனவர் கருணாமூர்த்தி, வனக் காப்பாளர் முனிசாமி, வனக்காவலர் லட்சுமணன் ஆகியோரும், பொதுமக்களும் அந்தப் பாம்பை பிடித்தனர். பின்னர், அதனை சங்கராபுரம் காப்புக் காட்டில் கொண்டு சென்று விட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.