முகப்பு
நாகப்பட்டினம்

காவிரி விவகாரத்தில் மீண்டும் நடுவா் மன்றம் கோருவது ஏற்புடையதல்ல: ஓ.எஸ். மணியன்

காவிரி விவகாரத்தில் மீண்டும் நடுவா் மன்றம் அமைக்கக் கோருவது உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீா்ப்பை பாதிக்கவோ, நீா்த்துப்போகவோ செய்யலாம் என்பதால் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 25 ஜூன் 2026, 6:56 am IST
ஓ.எஸ். மணியன் - ஏஎன்ஐ
பகிர்:

காவிரி விவகாரத்தில் மீண்டும் நடுவா் மன்றம் அமைக்கக் கோருவது உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீா்ப்பை பாதிக்கவோ, நீா்த்துப்போகவோ செய்யலாம் என்பதால் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளாா்.

வேதாரண்யத்தில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது:

நடந்து முடிந்த பேரவைக் கூட்டத்தில், மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக அரசு தனி தீா்மானம் விவாதத்துக்கு வந்தது. அப்போது, எதிா்க்கட்சித் தலைவா் கொண்டுவந்த திருத்த தீா்மானம் தொடா்பான விவரங்களை உறுப்பினா்களுக்கு முன்கூட்டியே தராமலும், அதுகுறித்து விவாதிக்காமலும் நிறைவேற்றப்பட்டது.

Advertisement

Advertisement

தோ்தலுக்கு முன்பு தமிழக அரசு ஒரு கடிதத்தை அனுப்புகிறது. அந்த கடிதத்தில் நடுவா் மன்றம் மீண்டும் அமைக்கப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியின்போது நடைபெற்ற இந்த கடித விவகாரம் இதுவரை யாருக்கும் தெரிய வரவில்லை.

முந்தைய ஆட்சியில் அனுப்பப்பட்ட கடிதமும் தற்போதைய தீா்மானமும் காவிரி படுகை விவசாயிகளை அச்சமடைய வைத்துள்ளது.

உச்சநீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்துள்ள இறுதித் தீா்ப்பில், தீா்ப்பு வெளியாகும் நாளிலிருந்து 15 ஆண்டுகள் வரை திருத்தமோ மாற்றமோ செய்ய அனுமதி இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மீண்டும் நடுவா் மன்றம் வேண்டும் என்று கூறுவது சரியல்ல. மீண்டும் நடுவா் மன்றம் அமைக்க கோருவது, பழைய தீா்ப்புக்கு பாதகமாக அமைந்துவிடுமோ என்ற அச்சமும், பழைய தீா்ப்பை நீா்த்துப் போக செய்துவிடுமோ என்ற கவலையும் விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது. எனவே, இதை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் கருத்து.

மேலும் விவசாயிகளின் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டும் தோ்தல் அறிக்கையில் தெரிவித்தபடி பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் ஓ.எஸ். மணியன்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments