முகப்பு
வேலூர்

சாலைத் தடுப்பில் பைக் மோதியதில் இளைஞர் சாவு

நாட்டறம்பள்ளி அருகே சாலைத் தடுப்புச் சுவர் மீது பைக் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.

Updated On : 24 ஜூலை 2018, 12:38 am IST
பகிர்:

நாட்டறம்பள்ளி அருகே சாலைத் தடுப்புச் சுவர் மீது பைக் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
 வேலூர் மாவட்டம், வாலாஜா சத்யாநகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷின் மகன் கன்னியப்பன்(19). இவர், பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். திங்கள்கிழமை காலை பெங்களூருவிலிருந்து வாலாஜா நோக்கி வந்தார். தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளியை அடுத்த வெலகல்நத்தம் மேம்பாலம் அருகே வந்தபோது, பைக் நிலைதடுமாறி சாலை நடுவே உள்ள தடுப்பு மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த கன்னியப்பனைப் பார்த்த அவ்வழியாகச் சென்றனர்கள், 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர். எனினும் ஆம்புலன்ஸ் அரை மணி நேரம் தாமதமாக வந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, கன்னியப்பன் மீட்கப்பட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் திங்கள்கிழமை மாலை இறந்தார்.  இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments