பள்ளி மாணவியருக்கு பாராட்டு
மாவட்ட அளவிலான ஆங்கில பேச்சுப் போட்டி மற்றும் தமிழ் கையெழுத்துப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற வி.நம்மியந்தல்
மாவட்ட அளவிலான ஆங்கில பேச்சுப் போட்டி மற்றும் தமிழ் கையெழுத்துப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற வி.நம்மியந்தல் அரசு நடுநிலைப் பள்ளி மாணவியருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
துரிஞ்சாபுரம் ஒன்றியம், வி.நம்மியந்தல் அரசு நடுநிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவி சமீனா ஆங்கில பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் 2-ஆம் இடமும், அதே வகுப்பில் பயிலும் மோகனப்பிரியா தமிழ் கையெழுத்துப் போட்டியில் முதலிடமும் பெற்றனர் . இவர்களை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி பாராட்டி ரொக்கம் மற்றும் சான்றிதழை அண்மையில் வழங்கினார்.
பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டாரக் கல்வி அலுவலர் கோ.குணசேகரன், பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ்.வெங்கடேசன்ஆகியோர் மாணவியரை பாராட்டி புத்தகம் மற்றும் எழுதுபொருள்களை பரிசாக வழங்கினர்.