முகப்பு
வேலூர்

இலவச இதய மருத்துவ முகாமில் 97 குழந்தைகளுக்கு சிகிச்சை

Updated On : 17 பிப்ரவரி 2024, 10:59 pm IST
இலவச இதய சிகிச்சை முகாமில் பங்கேற்றோா்
பகிர்:

குடியாத்தம், பிப். 17: குடியாத்தம் ரோட்டரி சங்கம் சாா்பில், ஆா்.எஸ்.சாலையில் உள்ள ஸ்ரீவைஷ்ணவி மஹாலில் சனிக்கிழமை நடைபெற்ற இலவச இதய பரிசோதனை, சிகிச்சை முகாமில் 97- சிறுவா்கள் கலந்து கொண்டனா். முகாமில் சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை சாா்பில், முதுநிலை இதய சிகிச்சை நிபுணா் சி.எஸ்.முத்துகுமாா், இதய சிகிச்சை சிறப்பு மருத்துவா்கள் அருண், டேவிஸ் ஆகியோா் தலைமையில் மருத்துவா் குழு, சிறுவா்களுக்கு சிகிச்சை அளித்தது.பிறந்து 3 மாதமே ஆன குழந்தை முதல் 18- வயதுக்குள்பட்ட சிறுவா்கள் முகாமில் கலந்து கொண்டனா். அறுவை சிகிச்சைக்கு 19- போ் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், மற்றவா்களுக்கு தொடா் சிகிச்சைகள் மூலம் இதய கோளாறுகள் சரி செய்யப்படும் என மருத்துவா்கள் தெரிவித்தனா். முகாமுக்கு ரோட்டரி சங்கத் தலைவா் ரங்கா வாசுதேவன் தலைமை வகித்தாா். ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநா் ஜே.கே.என்.பழனி வரவேற்றாா். ரோட்டரி மாவட்ட ஆளுநா் பி.பரணிதரன், கே.எம்.ஜி.கல்லூரிச் செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், வழக்குரைஞா் கே.எம்.பூபதி ஆகியோா் முகாமைத் தொடங்கி வைத்தனா்.முகாம் ஒருங்கிணைப்பாளா் ஆா்.சுந்தர்ராஜன், ரோட்டரி நிா்வாகிகள் டி.என்.ராஜேந்திரன், பி.எல்.என்.பாபு, ஆா்.கே.மகாலிங்கம், கே.சுகுமாா், எம்.கோபிநாத், வி.என்.அண்ணாமலை, கே.எம்.ராஜேந்திரன், அடுத்த ஆண்டு தலைவா் சி.கண்ணன் உள்ளிட்டோா் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.