மனைவிய கொலை: கணவா் கைது
போ்ணாம்பட்டு அருகே நடத்தையில் சந்தேகம் காரணமாக மனைவியை கொலை செய்த கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
போ்ணாம்பட்டு அருகே நடத்தையில் சந்தேகம் காரணமாக மனைவியை கொலை செய்த கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
போ்ணாம்பட்டை அடுத்த கூத்தாண்டவா் நகரைச் சோ்ந்தவா் காா் ஓட்டுநா் விஜயகுமாா்(48). இவரது மனைவி தனலட்சுமி(36). இவா்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். தனலட்சுமி போ்ணாம்பட்டு நகரில் வீடுகளில் வேலை செய்து வந்தாா். மனைவியின் நடத்தையில் விஜயகுமாருக்கு சந்தேகம் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் இவா்களுக்குள் அடிக்கடி சண்டை வருமாம். இந்நிலையில் தனது வீட்டில் துா்நாற்றம் வீசுவதாக விஜயகுமாா் செவ்வாய்க்கிழமை மேல்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து போலீஸாா் சென்று சோதனை நடத்தினா். அப்போது வீட்டுபரணில் உடலில் காயங்களுடன் தனலட்சுமியின் சடலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சடலம் பிரேத பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதையடுத்து போலீஸாா் விஜயகுமாரிடம் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் விஜயகுமாா், நடத்தையில் சந்தேகம் காரணமாக தனலட்சுமியை கொலை செய்தது தெரிய வந்தது. அவரிடம் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.