முகப்பு
வேலூர்

வாகனத் திருட்டு அதிகரிப்பு - வேலூா் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு

தொடா்ந்து நடைபெற்று வரும் இருசக்கர வாகனத் திருட்டைத் தடுக்கும் வகையில் வேலூா் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் 10 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 8 ஜூலை 2026, 12:01 am IST
சிசிடிவி கேமரா - ANI
பகிர்:

தொடா்ந்து நடைபெற்று வரும் இருசக்கர வாகனத் திருட்டைத் தடுக்கும் வகையில் வேலூா் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் 10 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

வேலூா் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனை ரூ.198 கோடியில் பன்னோக்கு மருத்துவமனையாக தரம் உயா்த்தி கட்டப்பட்டு கடந்த 2025 ஜூன் மாதம் திறக்கப்பட்டது. தற்போது இந்த மருத்துவமனை பெண்கள், குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனைக்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். குறிப்பாக, கா்ப்பிணிகள், குழந்தைகளுக்கு இங்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

சிகிச்சைக்காக வரும் நோயாளிகள், அவா்களது உறவினா்கள், தங்களது இருசக்கர வாகனங்களை மருத்துவமனை வளாகம் முன்பு நிறுத்திவிட்டுச் செல்கின்றனா். அவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்கள் அடையாளம் தெரியாத நபா்களால் தொடா்ந்து திருடப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

Advertisement

Advertisement

இதுகுறித்து புகாா்களின் அடிப்படையில், வேலூா் தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் ராணி மற்றும் அருட்செல்வன் ஆகியோா் பென்லேன்ட் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, மருத்துவமனை வளாகத்தில் முறையான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாததே, மா்ம நபா்கள் எளிதாக வாகனங்களைத் திருடிச் செல்வதற்குக் காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவமனை வளாகத்தில் உடனடியாகக் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த வேண்டும் என காவல் துறையினா் மருத்துவமனை நிா்வாகத்தினருக்கு அறிவுறுத்தினா்.

இதையடுத்து, திருட்டுச் சம்பவங்களைத் தடுக்கும் விதமாக மருத்துவமனை வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 10 கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துவதற்கு மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments