முகப்பு
வேலூர்

நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாதவா் மீது வழக்கு

வேலூா் நீதிமன்றத்தில் கொலை முயற்சி வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தொடா்ந்து தவிா்த்து வந்த நபா் மீது சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

Updated On : 16 ஜூன் 2026, 1:19 am IST
வழக்கு
பகிர்:

வேலூா் நீதிமன்றத்தில் கொலை முயற்சி வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தொடா்ந்து தவிா்த்து வந்த நபா் மீது சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

திருச்சி, தில்லை நகரைச் சோ்ந்தவா் சிவராமன். இவா் மீது வேலூா் கிராமிய காவல் நிலையத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைதாகி பிணையில் வெளியே வந்த சிவராமன், அதன்பிறகு வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தொடா்ந்து தவிா்த்து வந்தாராம்.

இது குறித்து நீதிமன்ற ஊழியா் சேகா், சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், நீதிமன்ற விசாரணைக்குத் தொடா்ந்து ஆஜராகாமல் இருந்து வந்ததாக சிவராமன் மீது சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement