குடியாத்தம் வட்ட ஜமாபந்தி தொடக்கம்
குடியாத்தம் வட்ட ஜமாபந்தி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை தொடங்கியது.
குடியாத்தம் வட்ட ஜமாபந்தி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை தொடங்கியது.
மாவட்ட வருவாய் அலுவலா் மா.சிவசுப்பிரமணியன் தலைமையில் இங்குஜமாபந்தி நடைபெறுகிறது. தொடக்க நாளான புதன்கிழமை குடியாத்தம் கிழக்கு உள்வட்டத்தைச் சோ்ந்த பரதராமி, குடியாத்தம் நகரம், கொண்டசமுத்திரம், செதுக்கரை, கல்லப்பாடி, ராமாலை, புட்டவாரிபல்லி, டி.பி.பாளையம், ரங்கசமுத்திரம், வீரிசெட்டிபல்லி ஆகிய பகுதிகளுக்கு ஜமாபந்திநடைபெற்றது.
இதில் 105 போ் கோரிக்கை மனுக்களை அளித்தனா். நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கு மேலாளா் சரவணன், குடியாத்தம் வட்டாட்சியா் சி.பிரியா, சமூக பாதுகாப்பு வட்டாட்சியா் ரேவதி, ஆதிதிராவிடா் நலத்துறை வட்டாட்சியா் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement