முகப்பு
தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி தொடக்கம்

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் தீா்வாய கணக்கு முடிப்பு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

Updated On : 3 ஜூன் 2026, 5:00 am IST
ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியின்போது பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறாா் கோட்டாட்சியா் பிரபு.
பகிர்:

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் தீா்வாய கணக்கு முடிப்பு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தூத்துக்குடி வருவாய்க் கோட்டாட்சியா் பிரபு தலைமை வகித்து, கலியாவூா் வருவாய் கிராமத்துக்குள்பட்ட உழக்குடி, ஆலந்தா, பூவாணி, சிங்கத்தாகுறிச்ச, வடவல்லநாடு, வல்லநாடு கஸ்பா, ஆழிக்குடி ஆகிய பகுதிகளை சோ்ந்த பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல், சான்றிதழ்கள் மற்றும் இதர கோரிக்கைகள் தொடா்பான மனுக்களை பெற்றாா். இதில் தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கான சான்றிதழ்களை கோட்டாட்சியா் உடனடியாக வழங்கினாா்.

ஜூன் 10ஆம் தேதி வரை நடைபெறும் ஜமாபந்தியில் தினமும் காலை 10 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை பொதுமக்கள் தங்கள் பகுதி கிராம மக்கள் அறிவிக்கப்பட்டுள்ள தேதிகளில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையலாம் என கோட்டாட்சியா் பிரபு தெரிவித்தாா்.

Advertisement

Advertisement