முகப்பு
கோயம்புத்தூர்

"ஃபைன் ஃபியூச்சர்: நேரில் புகார் அளிப்பவர்களுக்கே பணம் திரும்பக் கிடைக்கும்'

ஃபைன் ஃபியூச்சர் நிதி நிறுவன மோசடி தொடர்பாக பொருளாதாரக் குற்றபிரிவில் நேரில் வந்து புகார் அளிப்பவர்களுக்கு மட்டுமே பணம் திரும்பக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 12 மே 2013, 5:40 am IST
பகிர்:

ஃபைன் ஃபியூச்சர் நிதி நிறுவன மோசடி தொடர்பாக பொருளாதாரக் குற்றபிரிவில் நேரில் வந்து புகார் அளிப்பவர்களுக்கு மட்டுமே பணம் திரும்பக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த செந்தில்குமார் (34), அவரது நண்பர் விவேக் (25) இருவரும் ஃபைன் ஃபியூச்சர் இந்தியா என்ற பெயரில் ஆன்லைன் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். 1.72 லட்சம் முதலீட்டாளர்களிடம் ரூ.818 கோடி வரை மோசடி செய்ததாக சென்னையில் கைது செய்யப்பட்டனர். இதில் விவேக்கின் தம்பி நித்தியானந்தமும் கைது செய்யப்பட்டார். கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் நித்தியானந்தத்துக்கு கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. விவேக், செந்தில்குமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

 இந்த வழக்கில் கடந்த 3ஆம் தேதி 283 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்களிடம் இதுநாள் வரை புகார்கள் பெறப்பட்டு வந்தன. அதன்படி இதுவரை 2,500க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டுள்ளன.

 அதைத் தொடர்ந்து முதல் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்களிடம் புகார்கள் பெறும் பணி சனிக்கிழமை தொடங்கியுள்ளது. புகார் அளிக்க வருவோர் தங்களது அடையாள அட்டை, புகைப்படம், ஃபை ஃபியூச்சர் நிறுவன இணைய தளத்தில் பணம் கட்டியதற்கு ஆதாரமாக தங்களது பெயர் உள்ள பக்கத்தின் பதிவிறக்க நகல் உள்ளிட்டவற்றை எடுத்து வர வேண்டும்.

மேலும் முதலீட்டாளர்கள் தங்களது புகார்களை தபால்கள் மூலமாக அனுப்பக் கூடாது. நேரில் வந்துதான் புகார் அளிக்க வேண்டும். உரிய ஆவணங்களுடன் நேரில் வந்து புகார் அளிப்பவர்களுக்கு மட்டுமே பணம் திரும்பக் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மோசடிகளைத் தடுóக்கவே இந்தத் திட்டம் என்று ஃபைன் ஃபியூச்சர் வழக்கின் விசாரணை அதிகாரியும், கோவை பொருளாதாரக் குற்றப்பிரிவு டி.எஸ்.பி.யுமான பாலாஜி சரவணன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.