பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்ட வழக்குரைஞர்கள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோவையில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்டு வழக்குரைஞர்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோவையில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்டு வழக்குரைஞர்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கோவை வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் 200- க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் இருந்து ஊர்வலமாகச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல்.அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கோவை வழக்குரைஞர்கள் சங்கச் செயலாளர் சுதீஷ் கூறுகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஏப்ரல் 7-ஆம் தேதி வரை தொடர்ந்து நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளோம்.
தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்த உள்ளோம். நீதிமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
வழக்குரைஞர்கள் ஊர்வலமாகச் சென்றபோது நீதிமன்ற வளாகத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் விளம்பரப் பதாகையில் எழுதப்பட்டிருந்த ஹிந்தி எழுத்துகளை கிழித்து தங்களது எதிர்ப்புத் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.