காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி பொள்ளாச்சி, வஞ்சியாபுரம் பிரிவில் தமாகாவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி பொள்ளாச்சி, வஞ்சியாபுரம் பிரிவில் தமாகாவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமாகா பொள்ளாச்சி வட்டாரத் தலைவர் பகவதி தலைமை வகித்தார். இளைஞரணி மாவட்டத் தலைவர் மணிகண்டன், மாநில துணைத் தலைவர் குனியமுத்தூர் ஆறுமுகம், மாவட்டத் தலைவர் குணசேகரன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் சுப்பு ஆறுமுகம், நிர்வாகிகள் பிரியங்கா ராமசாமி, சுப்பராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும். ஆனைமலையாறு, நல்லாறு திட்டங்களை நிறைவேற்றவேண்டும். கோவை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கவேண்டும். பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
111 பேர் கைது:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும்
பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த வாகனம் பழுது பார்ப்போர் 100-க்கும் மேற்பட்டோர் செவ்வாய்க்கிழமை காலை, பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அனுமதி இன்றிப் போராட்டத்தில் ஈடுபட்ட 111 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.