லாரி மோதி தொழிலாளி சாவு
கோவை அருகே நீலாம்பூரில் லாரி மோதியதில் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
கோவை அருகே நீலாம்பூரில் லாரி மோதியதில் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த வாசகம் மகன் மகேஸ்வரன் (35). இவர், சூலூரை அடுத்த தென்னம்பாளையம் பகுதியில் தனது மனைவி, இரு குழந்தைகளுடன் தங்கி, அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மெஷின் ஆபரேட்டராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், மகேஸ்வரன் தனது இருசக்கர வாகனத்தில் முதலிபாளையம் பிரிவு அருகே உள்ள அவிநாசி சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தார்.
அப்போது பக்கவாட்டில் இருந்து வந்த டேங்கர் லாரி மகேஸ்வரன் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த மகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்துக்கு சென்ற சூலூர் போலீஸார், உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.