காரமடையில் மாநில அளவிலான சைக்கிள் போட்டி
மாநில அளவிலான சைக்கிள் போட்டி காரமடையில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாநில அளவிலான சைக்கிள் போட்டி காரமடையில் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழக பள்ளிக் கல்வித் துறை, காரமடை எஸ்ஆர்எஸ்ஐ மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி ஆகியன சார்பில் மாநில அளவிலான சைக்கிள் போட்டி காரமடை, பெரியபுத்தூர் கிராமத்தில் நடைபெற்றது.
இப்போட்டியை எஸ்ஆர்எஸ்ஐ பள்ளித் தாளாளர் ராமகிருஷ்ணன் தொடக்கிவைத்தார். இப்போட்டியில் தமிழகத்தில் உள்ள32 மாவட்டங்களில் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில், 14 வயதுக்கு உள்பட்ட பிரிவினருக்கான போட்டியில் மாணவர்களுக்கு 10 கி.மீ., மாணவிகளுக்கு 8 கி.மீ., 17 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் மாணவர்களுக்கு 15 கி.மீ., மாணவிகளுக்கு 12 கி.மீ., 19 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் மாணவர்களுக்கு 20 கி.மீ., மாணவிகளுக்கு 15. கி.மீ. தொலைவிலான போட்டிகள் நடைபெற்றன.
ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் புணேவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்க உள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.