சாலை விபத்தில் பெண் சாவு
சூலூர் அருகே நேரிட்ட சாலை விபத்தில் பெண் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
சூலூர் அருகே நேரிட்ட சாலை விபத்தில் பெண் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
சூலூரை அடுத்த பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ் (27). இவர், தனது உறவுப் பெண் மஞ்சுளா (18) என்பவருடன், சூலூர் திருச்சி சாலையில் உள்ள பாப்பம்பட்டி பிரிவு அருகே இரு சக்கர வாகனத்தில் சனிக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக வந்த லாரி, இருசக்கர வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி இருவரும் சாலையில் விழுந்தனர்.
அப்போது, லாரியின் பின்சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே மஞ்சுளா உயிரிழந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.