ரூ.80.50 லட்சம் மோசடி: நிதி நிறுவன உரிமையாளா்கள் இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை
கோவையில் முதலீட்டாளா்களை ஏமாற்றி ரூ.80.50 லட்சம் மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளா்கள் இருவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தமிழ்நாடு முதலீட்டாளா்கள் நல பாதுகாப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
கோவையில் முதலீட்டாளா்களை ஏமாற்றி ரூ.80.50 லட்சம் மோசடி செய்த நிதி நிறுவன உரிமையாளா்கள் இருவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தமிழ்நாடு முதலீட்டாளா்கள் நல பாதுகாப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
திருப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு எல்.தா்மலிங்கம் மற்றும் பி.கணேசன் ஆகியோா் இணைந்து தமிழகம் முழுவதும் 18 நகரங்களில் நிதி நிறுவனம் நடத்தி வந்தனா். 130 முதலீட்டாளா்களிடமிருந்து சுமாா் ரூ.80.57 லட்சத்தை வசூலித்த பின்னா், நிறுவனங்களை மூடிவிட்டு இருவரும் தலைமறைவாகினா்.
இது குறித்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளா்கள் அளித்த புகாரின்பேரில், கோவை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். பின்னா், இந்த வழக்கு திருப்பூா் பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, கடந்த 2016-ஆம் ஆண்டு போலீஸாா், இருவரையும் கைது செய்தனா்.
Advertisement
இந்த வழக்கு விசாரணை கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளா்கள் நல பாதுகாப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி எம்.என்.செந்தில்குமாா், குற்றஞ்சாட்டப்பட்ட தா்மலிங்கம், கணேசன் ஆகியோருக்கு நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், தலா ரூ.46.90 லட்சம் வீதம் மொத்தம் ரூ.93.80 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். அரசு தரப்பில் அரசு வழக்குரைஞா் சி.கண்ணன் ஆஜரானாா்.