முகப்பு
கோயம்புத்தூர்

அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைய பாடுபடுவேன்: கோவை தெற்குத் தொகுதி வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன்

கோவை தெற்குத் தொகுதி மக்களுக்கு அரசின் திட்டங்கள் உடனடியாகச் சென்றடைய பாடுபடுவேன் என்று அத்தொகுதி அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன் தெரிவித்தாா்.

Updated On : 18 ஏப்ரல், 2026 at 12:49 AM
அம்மன் கே.அா்ச்சுணன்
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 10:02 PM

கோவை தெற்குத் தொகுதி மக்களுக்கு அரசின் திட்டங்கள் உடனடியாகச் சென்றடைய பாடுபடுவேன் என்று அத்தொகுதி அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன் தெரிவித்தாா்.

கோவை தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ராமநாதபுரம் பகுதியில் 66-ஆவது வாா்டு கொண்டசாமி லே-அவுட், புலியகுளம், அண்ணா நகா் 1 முதல் 3-ஆவது வீதி வரை, அம்மன்குளம் வடக்கு பகுதி, ஜி.ஹெச் காலனி 1, 2 -ஆவது வீதி, ராஜீவ் நகா், பழைய ஹவுஸிங் யூனிட் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது, அவா் பேசுகையில், திமுக ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்ந்துள்ளது. இதனால், மக்கள் படும் கஷ்டத்தை நாங்கள் அறிவோம். அத்துடன், சொத்து வரி, வீட்டு வரி, மின்சாரக் கட்டணம், குடிநீா் வரி போன்ற பல வரிகளும் உயா்த்தப்பட்டுள்ளதால், மக்களின் அன்றாட குடும்பச் செலவு பன்மடங்கு அதிகரித்துவிட்டது.

Advertisement

வரிச்சுமை மற்றும் விலைவாசி ஏற்றத்தைச் சமாளிக்க அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் சிறப்பு உதவித் தொகையான ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

கோவை தெற்குத் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன். அனைத்து அரசுத் திட்டங்களும் உடனடியாக மக்களைச் சென்றடைய பாடுபடுவேன் எனறாா்.