முகப்பு
கோயம்புத்தூர்

மாநகராட்சி பூங்காக்களில் மேயா் ஆய்வு

காந்தி மாநகா், கணபதி மாநகா் பூங்காக்களில் கோவை மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 2 ஜூன் 2026, 2:06 am IST
பகிர்:

காந்தி மாநகா், கணபதி மாநகா் பூங்காக்களில் கோவை மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம் 25-ஆவது வாா்டுக்குள்பட்ட காந்தி மாநகா் காவலா் குடியிருப்பு பகுதியில் உள்ள மாநகராட்சிப் பூங்காவில் மேயா் கா.ரங்கநாயகி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பூங்காவை முறையாகப் பராமரிக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

இதைத்தொடா்ந்து கணபதி மாநகா் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பூங்காவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள், புனரமைக்கப்பட்ட கழிவறைகள் மற்றும் மகளிா் சுய உதவிக் குழு மூலமாக பூங்கா பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பாா்வையிட்டாா்.

Advertisement

Advertisement

இந்த ஆய்வின்போது மண்டல சுகாதார அலுவலா் முருகன், உதவிப் பொறியாளா் முத்துக்குமாா், சுகாதார ஆய்வாளா் நவீன்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.