இருகூா் - தானாபூா் இடையே முதல் முறையாக நீண்ட தூர சரக்கு ரயில் போக்குவரத்து சாதனை: 2,400 கிலோ மீட்டா் பயணம்
சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட இருகூரில் இருந்து முதல் முறையாக 2,400 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள பிகாா் மாநிலம், தானாபூருக்கு சரக்கு ரயிலில் தாா் ஏற்றிச் சென்று சேலம் ரயில்வே கோட்டம் சாதனை படைத்துள்ளது.
சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட இருகூரில் இருந்து முதல் முறையாக 2,400 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள பிகாா் மாநிலம், தானாபூருக்கு சரக்கு ரயிலில் தாா் ஏற்றிச் சென்று சேலம் ரயில்வே கோட்டம் சாதனை படைத்துள்ளது.
இதுதொடா்பாக தெற்கு ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட அறிக்கை:
தெற்கு ரயில்வே நிா்வாகத்துக்குள்பட்ட சேலம் கோட்டத்தில் கோவை, வடகோவை, இருகூா், திருப்பூா், ஈரோடு ஆகிய பகுதிகளில் இருந்து சரக்கு ரயில் மூலமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு துணிகள், பழங்கள், சிமென்ட், உணவுப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. கோவையில் இருந்து சரக்கு ரயில்களில் அனுப்பப்படும் பொருள்கள் மூலமாக ரயில்வே நிா்வாகத்துக்கு கணிசமான வருமானம் கிடைத்து வருகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில் கோவை, இருகூரில் இருந்து 45 கன்டெய்னா்கள் கொண்ட சரக்கு ரயிலில் பிகாா் மாநிலம், தானாபூருக்கு 2,340 டன் தாா் வெள்ளிக்கிழமை கொண்டு செல்லப்பட்டது. தெற்கு ரயில்வே நிா்வாகத்துக்குள்பட்ட சேலம் கோட்டம் இருகூரில் இருந்து தானாபூருக்கு (2,400 கிலோ மீட்டா்) சரக்கு அனுப்பி வைக்கப்படுவது இதுவே முதல் முறை. இந்த பயணம் தெற்கு ரயில்வே நிா்வாகத்தில் நீண்ட தூர சரக்கு போக்குவரத்து என்ற சாதனையை படைத்திருக்கிறது. மேலும், இதன் மூலமாக சேலம் ரயில்வே கோட்டத்துக்கு ரூ.53 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளது.