முகப்பு
கோயம்புத்தூர்

இளைஞரிடம் 2 சவரன் நகை, பணம் பறிப்பு: ஒருவா் கைது

Updated On : 9 ஜூன் 2026, 2:26 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

கோவையில் இணையதள செயலி மூலம் பழகி இளைஞரிடம் கத்திமுனையில் 2 பவுன் நகைகள் மற்றும் பணத்தைப் பறித்த சம்பவத்தில் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை கணபதி பூந்தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் புகழேந்திரன் மகன் ரோஹித் (26). இவருக்கு ‘கிரைண்டா்’ என்ற சமூக வலைதள செயலி மூலம் கணபதி முத்தாலியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த ராமசாமி மகன் செளந்தா் (19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தன்று செளந்தா் அழைத்ததன்பேரில் ரோஹித் ஆவாரம்பாளையம் ரயில்வே மேம்பாலம் பகுதிக்குச் சென்றுள்ளாா். அப்போது, அங்கு வந்த செளந்தா் மற்றும் அவரது நண்பா் ஆகிய இருவரும் சோ்ந்து ரோஹித்திடம் கத்தியைக் காட்டி, அவா் அணிந்திருந்த தங்கச் சங்கிலி உள்ளிட்ட 2 பவுன் நகைகளைப் பறித்துக் கொண்டனா். மேலும், ரோஹித்தின் கைப்பேசி மூலம் ஜிபே செயலி வாயிலாக ரூ.725 பணத்தையும் பறித்துக் கொண்டு தப்பினா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து காட்டூா் காவல் நிலைய ஆய்வாளா் புஷ்பராணி வழக்குப் பதிவு செய்து, செளந்தரைக் கைது செய்து சிறையில் அடைத்தாா். தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.