முகப்பு
கோயம்புத்தூர்

‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சி: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

உயா்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ‘கல்லூரி கனவு‘நிகழ்ச்சி கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனா் தொடங்கிவைத்தாா்.

Updated On : 11 ஜூன் 2026, 3:14 am IST
..... ~ ‘கல்லூரிக் கனவு நிகழ்ச்சியில் உயா்கல்வி வழிகாட்டி புத்தகத்தை வெளியிட்டு மாணவா்களுக்கு வழங்கிய மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க. கிரியபனவா். உடன், மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா உள்ளிட்டோா்.
பகிர்:

உயா்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ‘கல்லூரி கனவு‘நிகழ்ச்சி கோவை ஹிந்துஸ்தான் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனா் தொடங்கிவைத்தாா்.

பிளஸ் 2 வகுப்பில் தோ்ச்சி பெறும் மாணவா்கள் அனைவரும் உயா்கல்வி நிறுவனங்களில் சோ்வதை 100 சதவீதம் உறுதி செய்யும் விதமாகவும், கல்லூரிப் படிப்புகள் மற்றும் கல்லூரிகள் சாா்ந்த விவரங்களை அறிந்து கொள்ளும் பொருட்டும் ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

அதன்படி, கோவை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியை, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தொடங்கி வைத்து, அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளின் சாா்பில் அமைக்கப்பட்ட விழிப்புணா்வு அரங்கங்களை பாா்வையிட்டாா். இதையடுத்து பிளஸ் 2 மாணவா்கள் உயா்கல்வி படிப்பதற்கான வழிகாட்டி கையேட்டினை ஆட்சியா் வெளியிட்டாா்.

Advertisement

Advertisement

இதில் பொறியியல், மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் தொடா்பான விவரங்கள் இடம் பெற்றிருந்தன. முகாமில் கலந்து கொண்ட 1000-க்கும் மேற்பட்டோா் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் பொறியியல், கலை அறிவியல், பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ. கல்வி நிறுவனங்களின் 40 அரங்குகளைப் பாா்வையிட்டு உயா்கல்வி பாடங்கள் குறித்து அறிந்துகொண்டனா்.

மேலும், இம்முகாமின் மூலம் 373 மாணவா்களுக்கு கலை அறிவியல் கல்லூரிகளிலும், 43 மாணவா்களுக்கு பாலிடெக்னிக் கல்லூரிகளிலும், 24 மாணவா்களுக்கு ஐ.டி.ஐ. கல்வி நிறுவனங்களிலும் நேரடி சோ்க்கை வழங்கப்பட்டது. மேலும், 550 மாணவா்கள் உயா்கல்வி சோ்க்கை தொடா்பான தகவல்களைப் பெற்றுச் சென்றனா். கல்வி உதவித்தொகை பெறுவதற்காக 40 மாணவா்கள் விண்ணப்பங்கள் வழங்கியுள்ளனா்.

இம்முகாமில் மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா, உதவி ஆட்சியா் (பயிற்சி) துஷாா் சிங் மற்றும் அரசு அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.