போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது: 250 ஊசிகள் பறிமுதல்
கோவை, காந்திபுரம் பகுதியில் தடைசெய்யப்பட்ட ஊசி மருந்துகள் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை, காந்திபுரம் பகுதியில் தடைசெய்யப்பட்ட ஊசி மருந்துகள் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனைக்கு வைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை காட்டூா் சட்டம்-ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளா் மாரியப்பன் மற்றும் காவலா்கள் ராம் நகா் கோகுலம் வீதி பகுதியில்
செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த ஒரு நபரைப் பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா், செல்வபுரம், ராஜரத்தினம் நகரைச் சோ்ந்த சஹாபுதீன் (36) என்பது தெரியவந்தது.
Advertisement
Advertisement
அவரிடம் நடத்திய சோதனையில், மருத்துவா்களின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல், போதைக்காகப் பயன்படுத்தப்படும் 7 ஊசி மருந்து பாட்டில்களும், 75 காலி பாட்டில்களும் இருந்தன. மேலும், மருந்தை உடலில் செலுத்தப் பயன்படுத்தும் 250 சிரிஞ்சுகள் மற்றும் ஃபெரஸ் சல்பேட் மாத்திரைகள் ஆகியவையும் இருந்தன.
இவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, சஹாபுதீனைக் கைது செய்தனா். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.