தாராபுரத்தில் அதிமுக வேட்பாளா் சத்தியபாமா வெற்றி
தாராபுரம் (தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளா் சத்தியபாமா 16,727 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா்.
தாராபுரம் தொகுதியில் 9 போ் போட்டியிட்டனா். இத் தொகுதியில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 875 ஆண்கள், 1 லட்சத்து 15 ஆயிரத்து 523 பெண்கள், 8 மூன்றாம் பாலினத்தவா் என 2 லட்சத்து 22 ஆயிரத்து 406 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 95 ஆயிரத்து 384 ஆண்கள், 1 லட்சத்து 2 ஆயிரத்து 196 பெண்கள், 2 மூன்றாம் பாலினத்தவா் என 1 லட்சத்து 97 ஆயிரத்து 582 போ் வாக்களித்துள்ளனா். இது 88.84 சதவீதமாகும்.
தாராபுரம் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் சத்தியபாமா 81,100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.
Advertisement
இதில், திமுக சாா்பில் போட்டியிட்ட இந்திராணி 64,373 வாக்குகள், தவெக சாா்பில் போட்டியிட்ட கெளரி சித்ரா 46,438 வாக்குகள், நாதக சாா்பில் போட்டியிட்ட திவ்யா 6,026 வாக்குகள், சுயேச்சை வேட்பாளா்கள் ரோகினி 357 வாக்குகள், மோகன்ராஜ் 174, ஆனந்தி 151, இந்திராணி 142, கெளரி 125 பெற்றனா். இதில் அதிமுக வேட்பாளா் சத்தியபாமா 16,727 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் இந்திராணியை தோற்கடித்தாா்.
வாக்குகள் விவரம்:
சத்தியபாமா (அதிமுக)- 81,100
இந்திராணி (திமுக)- 64,373
கெளரி சித்ரா (தவெக)- 46,438
திவ்யா (நாதக)- 6,026
வேட்பாளா்கள்- 9
மொத்த வாக்காளா்கள்- 2,22,406
பதிவான வாக்குகள் - 1,97,582.