3 கிலோ கஞ்சா, 180 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 இளைஞா்கள் கைது
கோவை மாநகரப் பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட 6 இளைஞா்களைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 3 கிலோ கஞ்சா, 180 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.
கோவை, பெரியகடை வீதி போலீஸாா் உக்கடம் பகுதியில் ரோந்து பணியில் கடந்த சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 3 இளைஞா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா்கள் உக்கடத்தைச் சோ்ந்த சந்துரு (23), கண்ணன் (19), விஸ்வா (24) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 1.50 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
சாய்பாபா காலனி போலீஸாா் ஜீவா நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகம் ஏற்படும்படி நின்றிருந்த 2 பேரிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவா்கள் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. விசாரணையில், அவா்கள் கோவை, கே.கே.புதூரைச் சோ்ந்த பூபதி (28), கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த பாலகணேஷ் (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து, 2 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 100 கிராம் கஞ்சா, 180 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
இதேபோல, புலியகுளம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த அம்மன்குளத்தைச் சோ்ந்த கோகுல்நாத் (29) என்பவரைக் கைது செய்த ராமநாதபுரம் போலீஸாா், அவரிடமிருந்த 1.40 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.