முகப்பு
ஈரோடு

காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு: மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

காவிரி ஆற்றில் தற்போது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார். 

Updated On : 23 ஜூலை 2018, 7:45 am IST
பகிர்:

காவிரி ஆற்றில் தற்போது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காவிரி ஆற்றில் மேட்டூர் அணைக்கு அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டுள்ளதால், அணை வேகமாக நிரம்பி வருகிறது. அணைக்கு வரும் வெள்ளநீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்து விடப்படவுள்ளது.  இதனால், காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, பொது மக்கள் மற்றும் காவிரி ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்பாகவும் இருப்பதுடன், மேடான பகுதிகளுக்குச் செல்ல வேண்டும். காவிரி ஆற்றில் இறங்கவோ, ஆற்றைக் கடக்கவோ முயற்சிக்க வேண்டாம். தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனக் கால்வாய்களிலும், மேட்டூர் வாய்க்கால்களிலும் அதன் முழுக் கொள்ளளவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது குழந்தைகளைக் கால்வாய்கள் அருகில் செல்லாதவாறு பாதுகாப்பாக இருக்குமாறும், கால்வாயில் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments