மாவட்ட தடகளப் போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசு
ஈரோடு மாவட்டத் தடகளச் சங்கம் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இளையோர் தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
ஈரோடு மாவட்டத் தடகளச் சங்கம் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இளையோர் தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
இப்போட்டிகள், ஈரோடு வ.உ.சி.பூங்கா விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கி இரு நாள்கள் நடைபெற்றன. இதில், 14, 16, 18 மற்றும் 20 வயதுக்கு உள்பட்டோர் என 4 பிரிவுகளில் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 88 பள்ளிகளின் 1,060 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின் ஜான் பரிசுகளை வழங்கினார். இப்போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள், ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான இளையோர் தடகளப் போட்டிகளில் ஈரோடு மாவட்டம் அணி சார்பில் பங்கேற்று விளையாடுவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.